ASIKNEWS -
you're reading...
Kavithai

புதுக் கவிதை Part – I

The Tamil flag adopted by the World Tamil Conf...

Image via Wikipedia

குழந்தை

அம்மா அடித்ததற்காக
அழும் குழந்தையின்
அழுகையின் பின்னால்
ஒளிந்திருக்கிறது வாங்காமல்
போன விளையாட்டு பொருட்களும்
உடைந்து போன பொம்மைகளும்
அழைத்து போகாத இடங்களுக்குமான
ஏக்கங்களின் மிச்சங்கள்…

தேடல்

என் கிராமத்திற்கு செல்லும்
ஒவ்வொரு முறையும்
தொலைந்து போன
என் காலடி தடங்களை
தேடியலைகிறேன்
என் பழைய
பள்ளிக்கூட வாசலில்.

இன்றைய கருத்து போராட்டம்

காதலிக்கும் போது
இருவருக்குள்
கருத்து பரிமாற்றம்

கல்யாணத்துக்கு பின்
இருவருக்குள்
கருத்து வேறுபாடு

இல்லற ஏலம்

இடைத்தரகன் ஆரம்பித்தான்,
இல்லற ஏலத்தை.
வசீகரமான ஒரு வாலிபன்
விலைக்கு வருகிறான்.

வயது வந்த பெண்களின்
வயோதிக தந்தைகளே,
வசதிற்கேற்ப உங்களின்
விலையைக் கூறுங்கள்.

அவசரத்தில் ஒரு தந்தை
அடிமாட்டு விலையைக் கூற,
அமைதி இழந்த மகளோ, அதில்
அஞ்சாமல் குறுக்கிட்டாள்.

சீர்கெட்டுப் போன, இந்த
சதைப் பிண்டம் வேண்டாம்.
சமுதாயச் சந்தையே, இதனால்
சீரழிந்துப் போய் விடுமே.

உயிர்த்தமிழே!

அம்மா! அம்மா! என்று
அழுது பிறந்து
அன்னியம் பேசுவோர் அதிகம்! அதிகம்!…….
என்னுயிரே! நம்முயிரையேனும் ‘உயிர்த்தமிழே!’ என்று

வருந்துகிறோம்

தினம் காய்கறி
விலையேற்றம்
இரண்டு நாளுக்கு ஒருமுறை
சர்க்கரை விலையேற்றம்
வாரம் ஒருமுறை
பருப்பு விலையேற்றம்
மாதம் இறுமுறை
பெட்ரோல் விலையேற்றம்
இவற்றை பட்டியலிட்டு
மிகச்சரியாக செய்துகொண்டிருந்ததனால்
ஊழல் நடப்பதை
எங்களால் கவனிக்கமுடியவில்லை
மிகவும் வருந்துகிறோம்.
இப்படிக்கு இந்திய சுதந்திர கட்சி

பழிக்குப் பழி…

என் மரணம்
உன் கையில்
என்றால்…?
ஒரு நாள்!
உன் மரணம்
என் கையில்
தான் என்று
‘சிகரெட்’ புலம்புகிறது!

சோம்பலைக் கிழித்து……..

காலண்டரைக் கிழித்து
காலத்தை எண்ணும்
கனவு மனிதா
உன் சோம்பலைக் கிழித்து
உழைக்க எண்ணு
உயர்வு பிறக்கும்
உள்ளம் களிக்கும்!

குடிமக்கள்

மண்ணின் மைந்தர்களே,
நீங்கள் நம்பினால் நம்புங்கள்.

அரசியல் வாதிகளும்,
ஆளும் வர்க்கத்தினரும்,
உங்களுக்காக பல
நலத்திட்டங்கள் தந்துள்ளனர்.

கள்ளச்சாராயத்தை ஒழித்துவிட்டு
நல்ல சாராயம் தந்தார்கள்.

உங்களின் எதிர்காலத்திற்காக,
கோடிகள் தர நினைத்து,
வாரம் முழுதும் சேர்த்த
உங்கள் பணத்திற்கு
ஒரு வாரப் பரிசுச்சீட்டும்,
மாதம் முழுதும் சேர்த்த
உங்கள் பணத்திற்கு
ஒரு மாதப் பரிசுச்சீட்டும் தந்து,
இறுதியில் உங்களை
தெருக்கோடியில் நிறுத்தி விட்டார்கள்.

காலையில்
கஞ்சிக்கு அல்லாடும் நீங்கள்,
மாலையில்
குதிரைச்சவாரி செய்து,
குப்புற விழுவதேன்.

குடிமக்களே உங்களை,
காலம் பூராவும் அவர்கள்,
அடிமைத் தளத்தில்
ஆழ்த்தி விட்டார்கள்.

மண்ணின் மைந்தர்களே,
நீங்களாக திருந்தாவிட்டால்,
நிச்சயம் சீரழிந்துப் போவீர்கள்.

வேலைக்காரி

உயர் தர ஜாதி நாயை
சங்கிலி பிடித்து
தெருவோரம் அழைத்து சென்று
கழிவுகள் கழித்ததும் வீடு கொண்டு
வந்து சேர்க்கும் பணக்கார வீட்டு
வேலைக்காரியின் பிள்ளை கிடக்கிறது
சிறுநீரில் நனைந்தபடி
துடைத்து விட ஆளில்லாமல்….

காதல் வந்தாலே

பொதிகை

பாதங்கள் தரையினை தொட மறுக்கும்
உடல் பயிற்சிகள் இல்லாமல் எடை இழக்கும்
புவி ஈர்ப்பு விதிகளெலாம் பொய்யாகும்
துலா தட்டில் மனதினை காகிதம் வெல்லும்
ஒரு பருக்கில் வயிறு நிறையும்
விண்ணைப் பார்த்தே இரவு வீணாகும்
யாவும் நடக்கும்
அழகிய காதல் வந்தாலே

காதலியின் தேவை

என் மவுனங்களையும் எண்ணங்களையும்
சொல்லில் வராத வார்த்தைகளையும்
கண்களின் மொழியில் புரிந்து
கொள்ளும் இதயம் தேவை…..

ஏதேதோ எண்ணங்களில் புரண்டாலும்
கண்ணுறங்கும் வேளையில்
என்னுருவம் இமைகளில் பொருத்தி
உறங்கும் இதயம் தேவை….

என் கண்ணோரம் துளிர்க்கும்
சிறுதுளி கண்­ணீரையும்
உணர்ந்து கலங்கி தவிக்கும்
அன்பு இதயம் தேவை….

மொத்தத்தில் என்னையும் நேசிக்கும்
இதயம் தேவையில்லை
என்னை மட்டுமே நேசிக்கும்
காதல் இதயம் தேவை…..

முதல் கவிதை

இந்த வெள்ளை மலர்களை கொண்டு
நான் உன் மீது வைத்திருக்கும்
கொள்ளை பிரியத்திற்கு எல்லை இல்லை
என்பதை சொல்லி சந்தோஷத்தில்
துள்ளி குதிக்கும் என் மனதையும்
சேர்த்து கொடுக்கிறேன் உனக்கு…
அள்ளி முடிந்துகொள்
இந்த மலர்களோடு சேர்த்து என்னையும்
பூவுக்குள் மனமாய் என்றும் இருப்போம்
இந்த பாருக்குள் பிரியாமல் ஒன்றாய்

மலரும் மனமும்

அன்பே
காலையில் நீ சூடியிருந்த
மணம் வீசும் மல்லிகை பூக்கள்
மாலையில் நீ அவற்றை
வீசியபின் வாடிவிட்டது –
உன்னை பிரிந்த வருத்தத்தில்தான்
யாருக்குத்தான் வருத்தம் வராது
உன்னோடு இருந்துவிட்டு பிரியும்போது
அந்த மலருக்கு மட்டுமல்ல
என் மனதுக்கும் அதே நிலைதான்
அன்பே…

கனவு வங்கி

சமுதாயக் கூடத்தில்
காட்சிப் பொருளாகி விட்டாள்,
கல்லூரி வயதினைக்
கடந்து விட்ட ஒரு மாது.

அவள்
கனவுக் கடலுக்கு,
குத்தகை தந்துவிட்டு
அனுதினமும் வலை வீசினாள்.

ஆனால்,
அவள் வலையில்
ஒரு மீனும் சிக்கவில்லை.
குமுறி நெஞ்சம் அழுகிறாள்,
கல்லூரி வயதினைக்
கடந்து விட்ட அம் மாது.

கனவுப் பஞ்சம் ஆனதினால்,
கடனாகக் கிடைக்கும் என்ற
கற்பனை ஓட்டத்துடன்
கனவு வங்கியைத் தேடுகிறாள்,
கல்லூரி வயதினைக்
கடந்து விட்ட அம் மாது.

கானல் நீராகி விடுமோ
கனவில்லா தன் வாழ்வென்று,
கணவன் ஒருவனைத் தேடுகிறாள்,
கல்லூரி வயதினைக்
கடந்து விட்ட அம் மாது.

காதல்

உன்னை பிடித்தது!
உன்னை பிடித்ததால் எனக்கு
என்னை பிடித்தது!
உனக்கும் என்னை பிடித்ததால்,
எனக்கு என்னை இன்னும் பிடித்தது!!

வேண்டும்…

உன் கூந்தலில்
நான் சிக்காய்
இருக்க வேண்டும்!

உன் கண்ணில்
நான் இமையாய்
இருக்க வேண்டும்!

உன் நெற்றியில்
நான் பொட்டாய்
இருக்க வேண்டும்!

உன் விரலில்
நான் நகமாய்
இருக்க வேண்டும்!

உன் கையில்
நான் ரேகையாய்
இருக்க வேண்டும்!

உன் காலில்
நான் கொலுசாய்
இருக்க வேண்டும்!

உன் உடலில்
நான் நிழலாய்
இருக்க வேண்டும்!

உன் உயிரில்
நான் ஜீவனாய்
இருக்க வேண்டும்!

பெண்ணே…
நான் இப்படி எல்லாம்
இருக்க உன் வரம்
வேண்டும்…

உனது தொந்தரவும் சுகம் தான் எனக்கு…!!

விரல்கள் புல்லாங்குழலை
தொந்தரவு செய்ததால்தான்
இனிய ஓசை..
அன்பே!
உனது தொந்தரவும்
சுகம் தான் எனக்கு…!!

தொலைந்த காதல்

தொலைந்து போன
பொருட்கள் எல்லாம்
என்றோ ஒரு நாள் கிடைத்தது
கிடைக்காத பொருட்களை
விலைகொடுத்து
வாங்கி கொண்டேன்
தேடி பார்த்தும் கிடைக்காத
விலை கொடுத்தும்
வாங்க முடியாமல் தவிக்கும்
நான் தொலைத்த அரிய பொருள்
உன் காதல்……..

விடுபட்ட இருமுகம்

அவளின்
கால் பட்டு சிதறும்
மழை நீர் முத்துக்களில்
தொலைகிற என் முகம்
கரைந்து
நொறுங்கி
இடறி சிதறி
காணாமல் போகின்றன

தேடி பார்க்கிறேன்
பார்வை வீசி
பாதம் வரையிலும்

மழை நின்று
மிதமாய்
குளிர் வாடை காற்று
உற்சாகத்தில் என்னவள்
என்னவென்று தவிக்கிறேன்

இருவரின் முன்பு
புதிதாய்
தேங்கிய நீர் குட்டை
தெளிவாய் தெரிகிறது
தொலைந்து போன
என் முகம்
பிரகாசமாய்

தோள் சாய்ந்து
சந்தோசத்தில் அவள்
அழகாய்…
அழகழகாய்…

இரு முகம் தண்­ணீரில்!

என்னவள் அழைத்திருந்தாள்…

நள்ளிரவில் சிணுங்கியது
தலையணையின் கீழ் கைபேசி!!

என்னவள்தான் அழைப்பில்…
ஒரு வார்த்தை உதிர
கனிரசம் வழிய
‘காதலிக்கிறேன்’
எவ்விடமும்
ஒவ்வொரு முறையும்!

‘ஒரு கவிதை சொல்லேன்’
ஓர் செல்ல சிணுங்கல்
‘நீ’ என்கிறேன்!!!
‘ச்சீ’ மீண்டும் சிணுங்கல்!
இரவின் இருளோடு
நீண்ட உரை
கைபேசிகளுக்கே வெளிச்சம்!!!

முடித்த மறுநிமிடமே
அவளோடு கூடி
என்னை ஒதுக்கியிருந்தான்
நித்திரை சண்டாளன்!!!

கோபத்துடன்
தவிர்க்கப்பட்ட தலையணையும்!!
மீதமிருந்த உறக்கங்களும்!!

ஓர வஞ்சனை

ஊனமுற்றவர் என்றால் நீ ஓடிவந்து உதவுவாயே
என்னிடம் மட்டும் ஏன் இந்த இறுக்கம்?
உன் விழிகள் இரண்டும் மோதிய விபத்தில்
இதயம் தொலைத்து நிற்பவன் நான் என்பதால்
நானும் ஊனமுற்றவனே……
உதவு  மானே….
உயிர் கரையும் ஒற்றை சொல் சொல்லி…..

உன் பார்வை…

பகலிலே
நீ பார்த்த
பார்வையினால்,
இரவிலும்
என் இதயத்தில்
ஆயிரம் மெகா வோட்
மின் உற்பத்தி!

வேண்டுதல்

மறந்து விடு என்று
உன்னிடம் சொல்லும்
ஒவ்வொரு முறையும்
மறக்காமல் வேண்டுகிறேன்
இறைவனிடம் நீ என்னை
மறக்க கூடாது என்று…

என்னவளே…

எனக்காக பிறந்தவளே
என் உயிர் சுமப்பவளே

மாலையிட்ட நாளாய் என் கரம் பற்றியவளே
உன்னை பிரிந்தது இல்லை இன்று வரை

உன்னை முதல் முறை பார்த்தபோதே
நீ எனக்காக பிறந்தவள் என மனதில் ஒட்டிக்கொண்டாய்

முதல் பார்வை தொடங்கி இன்று வரை
உன் பார்வையில் காதல் உள்ளதடி

பிரியமானவளே உன் காதல் பார்வை
காணாமல் வாழ்க்கை வெறுமையாக உள்ளதடி!

தனிமையிலே இனிமை கண்டவன் நான்
உன் வருகைக்கு பின்பு தனிமையே பிடிக்கவில்லையடி

வேலைக்கு நான் சென்றாலும்
என் மனம் உன் பின்னால் சுற்றி வரும் வீட்டில்..

இத்தனை வருடங்கள் உன்னை காணாமல்
எப்படி தான் இருந்தேனோ!

என் வாழ்வில் வசந்தமாக வந்தவளே
என் உயிருக்குள் ஊடுருவி என் உயிர் சுமப்பவளே,
நீ இல்லாத ஒவ்வொரு நொடியும் கசக்குதடி எனக்கு..

எங்கு திரும்பினாலும் உன் புன்னகை தான் தெரிகிறது,
என் தலையணை உன் வாசம் வீசுகிறது,

சீக்கிரம் வந்துவிடம்மா பிரசவம் முடிந்து
உன்னை காணாது நான் நானாகவே இல்லை
என் உயிர் தாரமே!

நீ என்னை வெறுத்தபோதும்..

அன்பே!
நீ என்னை வெறுத்தபோதும்..
காற்றாய் வந்து
உனக்குள் வாழ்வேன்..
நீராய் வந்து
உன் குருதியில் கலப்பேன்..
நிலமாய் இருந்து
உன்னை சுமப்பேன்..
வானமாய் இருந்து
உனக்கு குடை பிடிப்பேன்..
நெருப்பாய் இருந்து
என்மீது நீ கொண்ட வெறுப்பை எரிப்பேன்..

என் வசம்

வானம் என் வசமானால்
உன் பெயரில் பதிந்திடுவேன்
பூமி என் பொறுப்பென்றால்
உனக்காகத் தந்திடுவேன்

வெண்ணிலா எனதானால்
மாதமெல்லாம் உன்மடியில்
சூரியன் எனதானால்
வெப்பம்நீக்கி உனக்களிப்பேன்

கார்மேகம் எனதானால்
நீயுறங்க பஞ்சணையாம்
நட்சத்திரம் எனதானால்
எண்ணாமல் உனக்காக

குளிரிமயம் எனதென்றால்
சிகரமெல்லாம் உன் சொந்தம்
சுரங்கங்கள் எனதானால்
தங்கமெலாம் உன் கழுத்தில்

ஏழையென் கையிருப்போ
சின்னஞ்சிறு இதயந்தான்
அதுவும் உன் நினைப்பாலே
காற்றாகக் கரைந்ததினால்

என்வசம் ஏதுமின்றி
வெறுமையாய் நிற்கின்றேன்
உன் வசம் எனைக்கொடுக்க
சித்தமாய்க் கிடக்கின்றேன்

முதல் காதல்

தூக்கத்தை தொலைத்துவிட்டேனடி
என்னுள் தாக்கத்தை விதைத்துவிட்டாயடி
ஏழு ஜென்மங்கள்
உயிர்களுக்கு-
எனக்கு மட்டும் விதிவிலக்கு:
ஆம் –
உன் ஒவ்வொரு சிரிப்பிலும்
உயிரிழக்கிறேனடி.

தமிழ் மறந்து…!

தங்கக் குடுவையில் அமுதம் தந்தால்
‘ச்சீ’ என முகம் சுளிக்கிறார்!

தகரக் குடுவையில் இனிப்பான விஷமென்றால்
முகம் மலர்ந்து சுவைக்கிறார்!

தமிழமுதம் கசக்கிறதாம்- அந்த
ஆங்கில விஷம் இனிக்கிறதாம்!

நாகரீக மோகத்திலே ஜவ்வாது
சாக்கடை பேதமறியா அலறுகிறார்!

தாரக மந்திரமாம் தமிழைப் பொல்லார்
தட்டி தலைக்குனிவு செய்கின்றார்!

அடுக்குமோ இவ்வநியாயம் – இதுபோல்
நடக்குமோ எந்நாட்டிலும்!

புத்தி மங்கிய புது நாகரீகப் புத்திசாலிகள்
புவிமீது பேரன்புத் தமிழ் மறந்தார்!

தாரத்தின் சொற்கேட்டு தாயை நிந்திக்கும்
தற்குறி புருஷரன்றோ இவர்கள்!

பேரம்பேசி விற்றாயோ தமிழ் பண்பாட்டை
பாரமெனத் தூக்கி எரிந்தாயோ!

ஜென்மம் முக்திபெற தமிழனாய்ப் பிறந்தாய்
தமிழ் மறந்து நடமாடும் கூடானாய்!

என்னுடன்…

விடைபெறும் தருணங்களில்…
உன்னிடத்தில் சொல்லிவிட்டு
செல்கிறேன்… – ஆனால்..
என்னுடன்
வர மறுக்கிறது
என் மனது…
உன் நினைவுகளே துணையாய்
விடைபெறுகிறேனடா…

Advertisements

About asik5678

Don't care about others be honest

Discussion

Comments are closed.

Hemant Karkare ji

He is a IPS officer in Indian state of Maharashtra. He is bravest and honest police officer in india.
Hemant Karkare laid down his lives fighting terrorists during the Mumbai attacks, on 27 November 2008.

Currency Converter

Blog Stats

  • 258,671 hits

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 38 other followers

Advertisements
%d bloggers like this: